டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு என முதற்கட்ட தகவல் Delhi Blast
டெல்லி செங்கோட்டை அருகே வெடி விபத்து - 8 பேர் உயிரிழப்பு என முதற்கட்ட தகவல் Delhi Blast
டெல்லி செங்கோட்டை முதலாவது நுழைவு வாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்தது. இதனால் அருகே இருந்த 4 வாகனங்கள் வரை தீப்பற்றி சேதமடைந்துள்ளன
இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகி உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. உடல்கள் சாலையில் சிதறி உள்ள காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கோட்டைக்கு அருகிலுள்ள சந்தை பகுதியில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தால் நிலைகுலைந்த மக்கள், என்ன நடக்கிறது என்று தெரியாமல் பீதியில் உறைந்தனர். இதில் 6 கார்கள், 4 இருசக்கர வாகனங்கள், 3 ஆட்டோ மற்றும் ஒரு வேன் தீயில் எரிந்து சேதமானது.
வெடிவிபத்தின் அதிர்வால், அப்பகுதியில் இருந்த பல கடைகளின் ஜன்னல்கள், கதவுகள் நொறுங்கி சேதமடைந்தன. உடனடியாக, டெல்லி காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததாகவும் டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரிகள், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்
தீயணைப்பு வீரர்கள், வெடிப்பின் தீவிரம் காரின் உள்ளே வெடிகுண்டு இருந்திருக்கலாம் என்று ஆரம்ப சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
வெடிப்பு குறித்து தகவல் கிடைத்தவுடன், பம்ப் டிஸ்போசல் ஸ்குவாட் மற்றும் தேசிய பாதுகாப்பு படை (NSG) சம்பவ இடத்திற்கு வந்தன. வெடித்த கார் எஞ்சிய பாகங்கள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இது சாதாரண விபத்தா அல்லது பயங்கரவாதிகளின் சதியா என்பதைக் கண்டறிய சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) சம்பவம் தொடர்பான தகவல்களை சேகரிக்க தொடங்கியுள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீர், ஹரியானா பகுதிகளில் வெடிமருந்துகள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதும், பலர் கைது செய்யப்பட்டதும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதா எனவும் ஆராயப்படுகிறது.
மேலும் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை சேகரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
Tags: இந்திய செய்திகள்
