Breaking News

குவைத்தின் ஜசீரா ஏர்வேஸ் அதிரடி ஆபர் 1 டிக்கெட் வாங்கினால் 1 டிக்கெட் முற்றிலும் இலவசம் பெறுவது எப்படி jazeera airways buy 1 get 1 free offer

அட்மின் மீடியா
0
குவைத்தின் பட்ஜெட் விமானமான ஜசீரா ஏர்வேஸ் அதிரடி சலுகையினை அறிவித்துள்ளது:




ஜசீரா ஏர்வேஸ் என்பது குவைத் நாட்டைச் சேர்ந்த ஒரு குறைந்த கட்டண விமான நிறுவனம், இதன் தலைமையகம் குவைத் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது. 

இது மத்திய கிழக்கு, இந்தியா, இலங்கை, ஐரோப்பா மற்றும் நேபாளம் போன்ற பல நாடுகளுக்கு திட்டமிடப்பட்ட சேவைகளை வழங்குகிறது. குவைத்தின் இரண்டாவது தேசிய விமான நிறுவனமாக இது நிறுவப்பட்டது.

ஜசீரா ஏர்வேஸ், அதன் 20வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பயணிகளுக்கு பெரிய சலுகையை அறிவித்துள்ளது. 

இந்தத் திட்டத்தின்படி ஒரு டிக்கெட்டை வாங்குபவர்களுக்கு இலவசமாக மற்றொரு டிக்கெட் வழங்கப்படும். நவம்பர் 10 முதல் 13 வரை ஒரு வழி மற்றும் ரிட்டேன் டிக்கெட்டுகளை வாங்குபவர்களுக்கு இந்த இலவச டிக்கெட் பொருந்தும். 

SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html

எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல்  இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/how-to-fill-voters-enumeration-form.html

வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-voters-enumeration-form-online-apply.html

SIR கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கம் இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-how-to-fill-out-india-election.html

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/blog-post_9.html


மார்ச் 1,2026 முதல் ஜூன் 15,2026 வரையிலான தேதிக்கு இடையில் பயணிப்பவர்கள் இந்த டிக்கெட்டைப் பயன்படுத்தி பயணிக்கலாம். 

கூடுதலாக, J9BOGO20 என்ற தள்ளுபடி குறியீட்டைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு பிற கட்டண தள்ளுபடிகளும் கிடைக்கின்றன. 

குவைத்தில் 2005 இல் முதல் தனியாருக்குச் சொந்தமான விமான நிறுவனமாக தொடங்கப்பட்ட ஜசீரா ஏர்வேஸ் பின்னர் தேசிய விமான நிறுவனமாக மாற்றப்பட்டது. 

இந்தியாவின், சென்னை, திருவனந்தபுரம், கொச்சி உட்பட பல்வேறு நகரங்களுக்கு நேரடி சேவைகளையும் இந்த விமான நிறுவனம் வழங்கி வருகின்றன.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback