தமிழக அரசின் மின்சார துறையில் வயர்மேன் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் electrician helper requirement 2025
தமிழ்நாடு மின்சார துறையில் பல வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன, குறிப்பாக டிஎன்பிஎஸ்சி (TNPCS) மூலம் கள உதவியாளர் மற்றும் மின்கம்பி உதவியாளர் போன்ற பணிகளுக்கு. அக்டோபர் 17, 2025-க்குள் மின்கம்பி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும், டிசம்பர் மாதம் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்கம்பி உதவியாளர் (Wireman Helper): தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் இந்த பணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:-
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு இல்லை. அதற்கான சான்றிதழை பள்ளி, பஞ்சாயத்து அலுவலகம், நகராட்சி / மாநகராட்சியில் இருந்து பெற்று அனுப்ப வேண்டும்.
முன் அனுபவம்:-
விண்ணப்பதாரர் மின்ஒயரிங் தொழிலில் 5 வருடங்களுக்குக் குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
பணிபுரிந்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். தொடர்ச்சியாக இல்லாமல் விட்டுவிட்டு அதற்கான சான்றிதழை அவர்கள் பணிபுரிந்த/பணிபுரியும் நிறுவனத்திடமிருந்தோ, மின்உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர்களிடம் இருந்தோ அவர்களின் அலுவலக முத்திரை பெற்று அனுப்ப வேண்டும்.
இத்துறையால் நடத்தப்பட்ட "தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில்" கம்பியாளராக பயின்று தேர்ச்சி பெற்றவர்களும் உரிய சான்றுடன் விண்ணப்பிக்கலாம்.
தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் இத்துறையால் நடத்தப்பட்ட மின்சாரப்பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்கள் மட்டும் உரிய சான்றுடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப்படிவம்: மின் கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்விற்கான விண்ணப்பத்தினை http://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழ்க்கண்ட தேர்வுமையங்களில் தேர்வெழுத விரும்பும் தொழிற்பயிற்சி மையத்திற்கு அனுப்ப வேண்டும்.
Tags: வேலைவாய்ப்பு