6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்த் ஏன் விடுதலை? - உச்ச நீதிமன்றம் கூறிய காரணம்
அட்மின் மீடியா
0
2017ம் ஆண்டு சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் என்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது
2017ம் ஆண்டு சென்னை போரூர் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்த மரண தண்டனையை ரத்து செய்ததுடன் தஷ்வந்தை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
குற்றஞ்சாட்டப்பட்ட தஷ்வந்த் கொலை செய்ததை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யவில்லை
போதிய ஆதாரங்கள் இல்லாதது, CCTV காட்சியில் குற்றவாளி உறுதிபடுத்தப்படாதது, DNA ஆய்வு ஒத்துப் போகாதது ஆகியவற்றை சுட்டிக் காட்டி போதிய ஆதாரங்கள் இல்லாததால், எழுந்த சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்ட தஷ்வந்துக்கு சாதகமாக்கி விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி விக்ரம்நாத் அமர்வு தீர்ப்பு
Tags: தமிழக செய்திகள்