மாதம் ரூ.1000 யாருக்கெல்லாம் கிடைக்கும் - யாருக்கெல்லாம் கிடைக்காது முழு பட்டியல் இதோ
மாதம் ரூ.1000 பெற யாருக்கெல்லாம் கிடைக்கும் - யாருக்கெல்லாம் கிடைக்காது முழு பட்டியல் இதோ
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
சட்டப்பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறியும் பணி தொடங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில்,'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை வரும் 15ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் மேல் இருப்பவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
- 10 ஏக்கருக்கு மேல் புன்செய், 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலங்கள் வைத்திருப்பவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
- ஏற்கனவே குடும்பத்தில் ஒருவர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்றிருந்து, அதே ரேஷன் கார்டை வைத்து இன்னொருவர் விண்ணப்பிப்பவர்களின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
- குடும்பத்தில் யாரேனும் அரசு ஊழியர்களாக இருந்து, அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
- வார்டு உறுப்பினரைத் தவிர மக்களால் தேர்வு செய்யப்பட்ட பதவிகளில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர், எம்பி, எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளில் உள்ளவர்களின் குடும்ப பெண்கள் ரூ.1000 கேட்டு விண்ணப்பித்திருந்தால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
- ஆண்டுக்கு 2.5 லட்சத்துக்கும் மேல் ஓய்வூதியம் பெறும் முன்னாள் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குடும்ப பெண்கள், இப்போது அரசு பணியில் இருப்பவர்களின் குடும்ப பெண்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்தால் அவர்களின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
- அரசுத்துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களை சேர்ந்த, ஓய்வூதியதாரர்கள் அல்லாத பெண்கள் இத்திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.
- இந்திராகாந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் சேர்ந்த ஓய்வூதியம் பெறாத பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
- கணவரால் கைவிடப்பட்ட, 50 வயதிற்கு மேலாகியும் திருமணம் ஆகாத பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள மற்ற பெண்கள் விண்ணப்பிக்கத் தகுதி வாய்ந்தவர்கள்
- அரசு மானியம் பெற்று நான்கு சக்கர வாகனங்கள் வாங்கியவர்களை தவிர்த்து, சொந்த பயன்பாடுகளுக்காக நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பித்தாலும் அவர்களின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
உடனடியாக உங்கள் பகுதியில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கவும்
Tags: தமிழக செய்திகள்