ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணை முதலை இழுத்துச் சென்ற அதிர்ச்சி வீடியோ
ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணை முதலை இழுத்துச் சென்ற அதிர்ச்சி வீடியோ
அப்போது முதலை அவரை ஆற்றில் ஆழமான பகுதிக்குள் இழுத்துச் சென்றது.ஆற்றங்கரையில் இருந்த கிராம மக்கள் முதலையைத் துரத்தி விரட்ட முயன்றும் முடியவில்லை.
ஒடிசாவில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை முதலை இழுத்துச் சென்ற சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த திங்கட்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் ஜஜ்பூர் மாவட்டத்தில் பஞ்சர்பூரின் கண்டியா கிராமத்தைச் சேர்ந்த சௌதாமினி என்ற 57 வயது பெண் அப்பகுதியில் உள்ள காரஸ்ரோட்டா ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது முதலை அவரை ஆற்றில் ஆழமான பகுதிக்குள் இழுத்துச் சென்றது. ஆற்றங்கரையில் இருந்த கிராம மக்கள் முதலையைத் துரத்தி விரட்ட முயன்றும் முடியவில்லை.தகவலறிந்த தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். ஆனால் ஆற்றில் முதலைகள் இருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்:-
https://x.com/ajaynath550/status/1975396630200213825
Tags: இந்திய செய்திகள்