Breaking News

ஓலா மற்றும் உபர்க்கு போட்டியாக குறைந்த வாடகையில் இந்திய அரசின் பாரத் டாக்ஸி ஆப் அறிமுகம் முழு விவரம்

அட்மின் மீடியா
0
ஓலா மற்றும் உபர்க்கு போட்டியாக குறைந்த வாடகையில் இந்திய அரசின்  பாரத் டாக்ஸி ஆப் அறிமுகம் முழு விவரம்



ஓலா மற்றும் உபர் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக சவால் விடும் வகையில் இந்தியா "பாரத் டாக்ஸி"யை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஓலா மற்றும் உபர் போன்ற தனியார் டாக்ஸி நிறுவனங்களுக்கு அரசாங்க மேற்பார்வையில் மாற்றாக வழங்குவதை நோக்கமாகக் கொண்ட, நாட்டின் முதல் கூட்டுறவு டாக்ஸி சேவையான 'பாரத் டாக்ஸி'யை இந்திய அரசு தொடங்கியுள்ளது.

ஓலா, உபேர் போன்ற தனியார் டாக்ஸி நிறுவனங்களுக்கு போட்டியாக, மத்திய அரசின் 'பாரத் டாக்ஸி' சேவை டிசம்பர் மாதம் அறிமுகமாகவுள்ளது. 

இதன் முதல் கட்டமாக தலைநகர் டெல்லியில் 650 டாக்ஸிகளுடன் இந்த சேவை தொடங்கப்படவுள்ளது. அதன் பின்னர், 2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் 20 முக்கிய நகரங்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது. 


Bharat Taxi App Booking

இதன் அதிகாரப்பூர்வ செயலி கூகிள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப் (Apple App Store) ஸ்டோரில் கிடைக்கிறது. இந்த செயலி தற்போது சோதனை முயற்சியில் உள்ளது. 

முதலில் ப்ளே ஸ்டோரிலிருந்து பாரத் டாக்ஸி செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அடுத்து அதில் Sign up" என்பதை டேப் செய்து, உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்ட தேவையான விவரங்களை உள்ளிடவும்.

அடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும், அதனை பதிவிட்டவுடன் உங்கள் கணக்கு உருவாகும்.- உங்கள் தொலைபேசி எண் மற்றும் நீங்கள் அமைத்த கடவுச்சொல்லைப் பயன்படுத்தி செயலியில் லாக் இன் செய்யவும்.


https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177382

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback