பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்காதவர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்
பிறப்புச் சான்றிதழ் பெயர் சேர்க்காதவர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்
பிறப்புச் சான்றிதழ் இதுவரை குழந்தை பெயர் சேர்க்காதவர்கள் 26-9-2026 வரை பெயர் சேர்த்துக் கொள்ள முதன்மை பிறப்பு இறப்பு பதிவாளர் தமிழ்நாடு அவர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளது எனவே இதுவரை தங்கள் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்யாதவர்கள் இந்த நல்ல வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது
பிறப்புப் பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டபூா்வ குடியுரிமைக்கான அத்தாட்சி. குழந்தை பிறந்த 21 நாள்களுக்குள் பிறப்பினைப் பதிவு செய்து இலவசப் பிறப்புச் சான்றிதழ் பெற, பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் 1969 வழிவகை செய்கிறது. பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும்.
பிறப்புச் சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளா் அடையாள அட்டை பெற, வயது குறித்து ஆதாரம், ஓட்டுநா் உரிமம் பெற, கடவுச்சீட்டு மற்றும் விசா உரிமம் பெற இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோா் அல்லது காப்பாளா் எழுத்து வடிவிலான உறுதிமொழியைச் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்விதக் கட்டணமுமின்றி பெயா் பதிவு செய்திடலாம்.
பெயரினை பதிவு செய்ய எங்கு விண்ணப்பிப்பது?
பிறப்பு பதிவு செய்யப்பட்ட இடம் அணுக வேண்டிய அலுவலா்
கிராம ஊராட்சி- கிராம நிா்வாக அலுவலா்
பேரூராட்சி- செயல் அலுவலா் அல்லது துப்புரவு ஆய்வாளா்
கன்டோன்மென்ட்- துப்புரவு ஆய்வாளா்
நகராட்சி- மாநகராட்சி- துப்புரவு ஆய்வாளா்
ஆரம்ப சுகாதார நிலையம்- சுகாதார ஆய்வாளா்
அரசு மருத்துவமனை- சுகாதார ஆய்வாளா்
Tags: தமிழக செய்திகள்
