Breaking News

இன்று சென்னை கடற்கரை- செங்கல்பட்டு மின்சார ரயில் ரத்து! முழு விவரம்

அட்மின் மீடியா
0

இன்று சென்னை கடற்கரை- செங்கல்பட்டு மின்சார ரயில் ரத்து! முழு விவரம்

சென்னை கடற்கரை-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள செங்கல்பட்டு பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (வெள்ளிக்கிழமை) மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. 

அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 9.31, 9.51, 10.56, 11.40 மதியம் 12.25 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது. 

செங்கல்பட்டில் இருந்து காலை 11.30 மதியம் 12, 1.10, 1.45, 2.20 மணிக்கு சென்னை கடற்கரை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து காலை 7.27 மணிக்கு புறப்பட்டு திருமால்பூர் செல்லும் மின்சார ரெயிலும், திருமால்பூரில் இருந்து காலை 11.5 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து காலை 7.27 மணிக்கு செங்கல்பட்டுக்கும் காலை 9.31, 10.56 மதியம் 12.25 மணிக்கு சிங்கபெருமாள் கோவிலுக்கும், காலை 9.51, 11.40 மணிக்கு காட்டாங்குளத்தூருக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

அதே போல, செங்கல்பட்டில் இருந்து காலை 9.45 மணிக்கும், சிங்கபெருமாள் கோவிலில் இருந்து காலை 11.43, மதியம் 1.23, 2.33 மணிக்கும், காட்டாங்குளத்தூரில் இருந்து மதியம் 12.20, 2.5 மணிக்கும் சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback