தேர்வு கிடையாது ,நேர்காணல் கிடையாது! அங்கன்வாடியில் 618 காலிபணியடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் anganwadi recruitment 2025
தேர்வு கிடையாது ,நேர்காணல் கிடையாது! அங்கன்வாடியில் 618 காலிபணியடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் anganwadi recruitment 2025
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படுத்தப்படும் சாக்ஷாம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 என்ற திட்டத்தின் கீழ் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதிப்பூதியத்தின் அடிப்படையில் மொத்தம் 618 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
பணி : அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்
கல்வித்தகுதி: 12-ம் வகுப்பை தேர்ச்சி
விண்ணப்பிக்க https://wcd.py.gov.in/recruitment-anganwadi-worker-and-anganwadi-helper-2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2025
வயது வரம்பு:-
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31-ம் தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 35 வயது வரை இருக்கலாம்.
அங்கன்வாடியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் வசிப்பவரா இருக்க வேண்டும். இதற்கான குடியிருப்பு சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் பெண்களின் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு, நேர்காணல் ஆகியவை கிடையாது. இத்திட்டத்தின் தலைவர், செயலாளர்கள், உறுப்பினர்கள் அடங்கிய தேர்வு குழு மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை வெளியிடும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://wcd.py.gov.in/recruitment-anganwadi-worker-and-anganwadi-helper-2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://wcd.py.gov.in/sites/default/files/awh-new.pdf
Tags: வேலைவாய்ப்பு