Breaking News

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி என்றால் என்ன முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தேர்தல் ஆணையம் சமீபத்தில் மேற்கொண்டது. 

இதையடுத்து, நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்பட மொத்தம் 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை நவம்பர் மாதம் 4ந்தேதி தொடங்கும். வரைவு பட்டியல் டிசம்பர் 9ந்தேதி வெளியிடப்படும். டிசம்பர் 9ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை ஆட்சேபனைகள் இருந்தால் சமர்ப்பிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் கடைசியாக 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. எனவே அப்போது என்ன வாக்காளர் பட்டியல் இருந்ததோ அதனை அடிப்படை ஆண்டாக வைத்து, தற்போதைய வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட உள்ளது. 

தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்களுக்கு ஏற்கனவே 2002ஆம் ஆண்டும் பட்டியலில் இருந்தால் கூடுதலாக எந்த ஆவணமும் வழங்கத் தேவையில்லை.

ஒருவேளை 2002ஆம் ஆண்டு பட்டியலில் பெயர் இல்லை என்றால் அவர்கள் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட், சாதி சான்றிதழ் என 11 வகையான ஆவணங்களைப் பட்டியலிட்டுள்ளது.

பூத் லெவல் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். 

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு யாருடைய பெயராக விடுபட்டு இருந்தால் முதலில் கலெக்டரிடம் மேல் முறையீடு செய்யலாம்..அதில் திருப்தி இல்லை என்றால் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மேல் முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேவையான ஆவணங்கள்:-

இதன்படி 2003ம் ஆண்டுக்குப் பின்னர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள், தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க 

பிறப்புச் சான்றிதழ், 

பாஸ்போர்ட், 

கல்விச் சான்றிதழ், 

அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை அல்லது ஆணைகள், 

நிரந்தர குடியிருப்புச் சான்றிதழ், 

வன உரிமைச் சான்றிதழ், 

சாதிச் சான்றிதழ், 

மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு 

மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலம் அல்லது வீட்டு ஒதுக்கீட்டுச் சான்றிதழ், 

1967 க்கு முன்பு பல்வேறு பொது அதிகாரிகளால் வழங்கப்பட்ட பிற ஆவணங்கள் 

ஆகிய 11 ஆவணங்கள் சரிபார்ப்புக்கு ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை இடம்பெறவில்லை

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback