மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சியை தொடங்கினார்
அட்மின் மீடியா
0
புதிய கட்சியை தொடங்கிய மல்லை சத்யா
அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மதிமுகவிலிருந்து வெளியேறிய நிர்வாகிகளைக் கொண்ட குழு அமைப்பு.
மதிமுகவிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட முன்னள் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்
கடந்த 8ஆம் தேதி மதிமுகவின் துணை பொதுச்செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலும் இருந்தும் மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கினார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ.
இந்நிலையில் அண்ணா பிறந்தநாளான இன்று மல்லை சத்யா புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மதிமுகவிலிருந்து வெளியேறிய 15 பேர் கொண்ட நிர்வாகிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் கட்சிக் கொடியையும் மல்லை சத்யா அறிமுகம் செய்தார்.
Tags: அரசியல் செய்திகள்