காசி,இராமேசுவரம் இலவச ஆன்மிக பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
காசி,இராமேசுவரம் இலவச ஆண்மிக பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில்இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலிருந்து காசி அருள்மிகு விசுவநாதசுவாமி திருக்கோயிலுக்கு தமிழ்நாட்டிலுள்ள 20 மண்டலங்களிலிருந்து மண்டலத்திற்கு 30 பக்தர்கள் வீதம் 600 பக்தர்கள் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்றும், போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் நகல் இணைக்கப்பட வேண்டும்.
இந்த ஆன்மிகப் பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் 22.10.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
- Eligibility: Applicants must be Hindu, devout, aged 60-70, with an annual income not exceeding ₹2,00,000, and possess a fitness certificate and Aadhar card.
- Application: Forms can be obtained from zonal Joint Commissioner offices or downloaded from www.hrce.tn.gov.in.
- Submission Deadline: Completed applications with required documents must be submitted to the relevant zonal Joint Commissioner office by October 22, 2025.
- Contact: For more details, call the toll-free number 1800 425 1757.
Tags: தமிழக செய்திகள்