வீட்டின் மேற்கூரையில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் rooftop solar scheme 300 units free
வீட்டின் மேற்கூரையில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் முழு விவரம் 300 units of free electricity per month
பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவின் 17வது அமைச்சரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை அடுத்து வரும் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக உள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளார்.
அதில் வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் மின் வசதி ஏற்படுத்தித் தரப்படும். சோலார் மின் வசதி ஏற்படுத்தி உற்பத்தி செய்யும் வீடுகளுக்கு முதல் 300 யூனிட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அயோத்தியில், புதிய ராமர் கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்கி அயோத்தியில் இருந்து திரும்பிய சிறிது நேரத்திலேயே, பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22 அன்று ‘பிரதான்மந்திரி சூர்யோதயா யோஜனா’ அறிவித்தார்.அப்போது, ஒரு கோடி வீடுகளில்" மேற்கூரை சோலார் சிஸ்டம் நிறுவப்படும் என்று மோடி கூறினார்.
சோலார் வைப்பதால் ஏற்படும் நன்மைகள்:-
சோலார் பேனல்கள் தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் தங்கள் சொந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவுகின்றன, அரசாங்க மின்சாரத்தை அவர்கள் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது. இதன் விளைவாக நீண்ட காலத்திற்கு மின்சாரக் கட்டணத்தில் செலவு மிச்சமாகும், ஏனெனில் சோலார் பேனல் அமைப்பில் ஆரம்ப முதலீடு செய்யப்பட்டவுடன் சூரிய ஆற்றல் இலவசம்.
மேலும் சோலார் பேனல்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் மானியங்களை செயல்படுத்தியுள்ளது. ஜவஹர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன் மற்றும் மாநில-குறிப்பிட்ட சூரியக் கொள்கைகள் போன்ற மானியங்கள் சூரிய மின்சக்தியைத் தத்தெடுப்பதை ஊக்குவிக்க நிதிச் சலுகைகள் மற்றும் வரிச் சலுகைகளை வழங்குகின்றன.
இந்தியாவில் வீடுகளுக்கான சோலார் பேனல்கள் சமீப வருடங்களில் யூனிட்களின் அதிகரிப்பு மற்றும் மின்சாரம் இல்லாததால் பிரபலமாகி வருகிறது. இதனால் இந்தியாவில் சோலார் பேனல்களின் விலை சுமார் 70% குறைந்துள்ளது,
உங்கள் வீடுகளில் தனியார் அல்லது அரசின் உதவியுடன் மேற்கூரையில் சோலார் அமைக்க வேண்டும். இந்த திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக நீங்கள் மாதம் 300 யூனிட் வரை இலவசமாக பயன்படுத்த முடியும்.என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1 கிலோவாட்30,000/-
2 கிலோவாட் .60,000/-
3 கிலோவாட் அதற்கு மேல் -ரூ.78,000/-
இத்திட்டத்திற்கு வங்கிகள் மூலம் உடனடியாக கடன் வழங்கப்படும்
இத்திட்டத்தில் மேற்கூறப்பட்ட மானியம் நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற 7 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் செலுத்தப்படும்.
1 கிலோவாட் சூரிய தகடு. ஒரு நாளில், 4 முதல் 5 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும், நுகர்வோர் செய்யும் முதலீடு குறுகிய காலத்தில் திரும்ப பெறலாம்
மேலும் விவரங்களுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்
https://pmsuryaghar.gov.in/
விண்ணப்பிப்பது எப்படி:-
முதலில் மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்திற்க்கு செல்லுங்கள்
அடுத்து அதில் apply for rooftop solar என்பதை கிளிக் செய்யவும்
அதன்பின்பு அதில் registration என்பதை கிளிக் செய்யவும்
அடுத்து அதில் தமிழநாடு என்பதை செலக்ட் செய்து கொள்ளுங்கள், அதன்பின்பு உங்கள் மாவட்டத்தை செலக்ட் செய்து கொள்ளுங்கள் , அடுத்து உங்கள் மின் இனைப்பு எண் முழுவதுமாக பதிவிடுங்கள்
அதன்பின்பு மின் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ அவர்கள் பெயர் அங்கு காண்பிக்கப்படும் அதனை சரிபார்த்து அடுத்து என்பதை கிளிக் செய்யவும்
அதன்பின்பு உங்கள் மொபைல் நம்பரை பதிவிடுங்கள், அடுத்து உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஒடிபியை பதிவிட்டால் ரிஜிஸ்ட்ரேஷன் பதிவாகி விடும்
லாகின் செய்வது எப்படி:-
அதன்பின்பு மீண்டும் மேல் உள்ள லிங்க் சென்று அதில் apply for rooftop solar என்பதை கிளிக் செய்யவும்
அடுத்து அதில் Login to Apply for Rooftop Solar என்பதை கிளிக் செய்து உங்கள் மொபைல் எண்ணை பதிவிடுங்கள் அடுத்து கீழ் உள்ள கேப்சாவை பதிவிட்டு உள் நுழைந்து உங்கள் விண்ணபத்தை சரியாக பூர்த்தி செய்து சப்மிட் செய்யுங்கள்
அதன்பினு மின்சேவை அளிக்கும் நிறுவனத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கவும்.
உங்களுடைய வீட்டில் நிறுவுவதற்கு சாத்தியமுள்ளது என்று ஒப்புதல் அளிக்கப்பட்ட பின், நாம் சூரிய மின்தகடுகளை நிறுவலாம்
அதன்பின்பு அது தொடர்பான விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்து, மீட்டருக்காக விண்ணப்பிக்கவும்
மீட்டர் நிறுவப்பட்டு, மின்சேவை வழங்கும் நிறுவனம் ஆய்வு செய்து, இணையதளத்தில், மின்சார உற்பத்தி செய்வதற்கான அனுமதி சான்றிதழை வழங்கும். இவ்வாறு சோலார் மின்தகடு நிறுவியதற்கான அறிக்கை உருவாகும். அதன்பின், வங்கிக் கணக்கு உள்ளிட்ட விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு, 30 நாட்களுக்குள், உங்களுடைய வங்கிக் கணக்குக்கு, மானியத் தொகை செலுத்தப்படும்.
மானியம் எவ்வளவு?
மூன்று கிலோவாட் வரை, ஒவ்வொரு கிலோவாட்டுக்கும், 18,000 ரூபாய் மானியம் கிடைக்கும். மூன்று முதல், 10 கிலோவாட் வரை நிறுவினால், முதல் மூன்று கிலோ வாட்டுக்கு, தலா 18,000 ரூபாயும், அதற்கடுத்த ஒவ்வொரு கிலோ வாட்டுக்கும், தலா, 9,000 ரூபாயும் மானியமாக கிடைக்கும்.
Tags: தமிழக செய்திகள் தொழில் வாய்ப்பு முக்கிய செய்தி