Breaking News

தமிழகத்தில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10 முதல் அரசு பேருந்துகள் செல்ல தடை நீதிமன்ற உத்தரவு முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10 முதல் அரசு பேருந்துகள்  செல்ல தடை நீதிமன்ற உத்தரவு முழு விவரம்

அரசு போக்குவரத்து கழகம் தங்களுக்கு செலுத்த வேண்டிய ரூ.276 கோடியை செலுத்தவில்லை என கூறி மதுரை-குமரி டோல்வே தனியார் நிறுவனம், குமரி எட்டுரவட்டம் டோல்வே தனியார் நிறுவனம், சாலைப்புதூர்-மதுரை டோல்வே தனியார் நிறுவனம், நாங்குநேரி-குமரி டோல்வே ஆகிய 4 நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் போக்குவரத்து கழகங்களின் இந்த நடவடிக்கையால், பொது மக்கள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்ட நீதிபதி; தென்மாவட்டத்தில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10 முதல் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடத்து என உத்தரவிட்டார். 

கப்பலூர், எட்டுராவட்டம், சாலைப்புதூர், நாங்குநேரி சுங்கச்சாவடி வழியே அரசு பேருந்தை அனுமதிக்க கூடாது. சுங்கச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று

மதுரை - கன்னியாகுமரி டோல்வே பிரைவேட் லிமிடெட், கன்னியாகுமரி - எட்டூரவட்டம் டோல்வே பிரைவேட் லிமிடெட், சாலைப்புதூர் - மதுரை டோல்வே பிரைவேட் லிமிடெட் மற்றும் நாங்குநேரி - கன்னியாகுமரி டோல்வே பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களின் தொகுப்பில் இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback