தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு முழு விவரம் இதோ
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு முழு விவரம் இதோ
பத்து தேர்வு நிலைப் பேரூராட்சிகளை சிறப்பு நிலைப் பேரூராட்சிகளாகவும்
மூன்று முதல் நிலைப் பேரூராட்சிகளை சிறப்பு நிலைப் பேரூராட்சிகளாகவும்
எட்டு முதல் நிலைப் பேரூராட்சிகளை தேர்வு நிலைப் பேரூராட்சிகளாகவும்
பதின்மூன்று இரண்டாம் நிலைப் பேரூராட்சிகளை முதல் நிலைப் பேரூராட்சிகளாகவும் தரம் உயர்த்துதல் பற்றிய அறிவிக்கை
சிறப்பு நிலை பேரூராட்சிகளாக
கோவையின் சாத்தான்குளம், மற்றும் ஒத்தக்கல் மண்டபம்,
சேலம் பி.என். பட்டி,
திருவள்ளூரில் திருமழிசை,
தஞ்சாவூரில் பேராவூரணி,
ஈரோட்டில் நம்பியூர்,
மதுரையில் வாடிப்பட்டி,
கிருஷ்ணகிரியில் பர்கூர் ஆகிய பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
தேர்வு நிலை பேரூராட்சிகளாக
தேனியின் பழனிசெட்டிபட்டி, மற்றும் மேலசொக்கநாதபுரம்,
கன்னியாகுமரியின் குலசேகரம், மற்றும் இடிகரை,
கோவை செட்டிபாளையம், மோபிரிபாளையம், சுலீஸ்வரன்பட்டி, தொண்டாமுத்தூர்,
திண்டுக்கல் அகரம், செவுகம்பட்டி,
தென்காசி மேலகரம்,
ராமநாதபுரம் முதுகுளத்தூர் உள்ளிட்டப் பேரூராட்சிகள் தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
முதல் நிலை பேரூராட்சிகளாக
கன்னியாகுமரி வெள்ளிமலை, புத்தாளம், மண்டைக்காடு, ஆத்தூர்,
கோவையின் ஆலந்துைறை, ஈரோட்டின் எலாத்தூர்,
தேனியின் புத்திபுரம்,
சேலத்தின் நங்கவல்லி உள்ளிட்டப் பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
Tags: தமிழக செய்திகள்