Breaking News

6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு 11 நாட்கள் விடுமுறையும் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையைப் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தனியார் பள்ளிகள இயக்குனர் வெளியிட்டுள்ளனர்.

அதில், 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குச் செப்டம்பர் 15ல் தொடங்கி, 26ஆம் தேதிவரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இதே தேதிகளில் துவங்கி, காலாண்டு தேர்வு முடிவடையும்.


11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்கி, 25 ம் தேதிவரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

10,12 வகுப்பு மாணவர்களுக்குக் காலையில் தேர்வுகள் நடைபெறும் எனவும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்குப் பிற்பகலில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. 


இதன்படி, செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் அக்டோபர் 1 அன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை, அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தி ஆகியவை வர உள்ளது குறிப்பிடத்தக்கது


Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback