பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை அறிவிப்பு...யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ....முழு விவரம்
பள்ளி மாணவர்களின் தமிழ் இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ள திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு, ஆண்டுதோறும் ஆயிரத்து 500 மாணவர்களைத் தேர்வு செய்து, 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெளியிட்ட அரசானையில்
பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணக்கு சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மாெழி இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திறனறித்தேர்வு நடத்தப்படும்.
இந்தத்தேர்வின் மூலம் ஆண்டுதோறும் ஆயிரத்து 500 மாணவர்களைத் தேர்வுசெய்து மாதம்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
ஆயிரத்து 500 மாணவர்களில் 50 விழுக்காடு மாணவர்கள் அரசுப்பள்ளிகளிலிருந்து தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்த ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு’ நடத்தப்பட்டு வருகிறது.
2025-2026ம் கல்வி ஆண்டுக்கான இந்தத் தேர்வு அக்டோபர் 11ம் தேதி நடைபெற உள்ளது.
இதில், 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1,500 வீதம் 2 வருடங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் 1 படிக்கும் (மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ) மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வு எழுதத் தகுதிவுடையவர்கள். www.dge.tn.gov.in என்ற இணைய தளம்மூலம் இன்று முதல் செப்டம்பர் 4ம் தேதிவரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். செப்டம்பர் 4ம் தேதி கடைசி நாள் ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
04.09.2025
தேர்வு நடைபெறும் நாள்;-
11.11.2025
Tags: கல்வி செய்திகள்