Breaking News

ரயில் பயணச்சீட்டு முகவராக விண்ணப்பிக்கலாம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு Become An IRCTC Agent

அட்மின் மீடியா
0

ரயில் பயணச்சீட்டு முகவராக விண்ணப்பிக்கலாம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு


மதுரை ரயில்வே கோட்டத்தில் 25 ரயில் நிலையங்களில் பயணச் சீட்டு முகவராகச் செயல்பட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மதுரை கோட்டத்தில் கூடல் நகர், சமயநல்லூர், வாடிப்பட்டி திண்டுக் கல் மாவட்டத்தில் வடமதுரை, தாம ரைப்பாடி அய்யலூர், திருச்சி மாவட்டத்தில் குமாரமங்கலம் கல்பட்டி சத்திரம், வையம்பட்டி, கொளத்தூர், பூங்குடி, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை திருமயம், கீரலூர் வெள்ளனூர், சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, பனங்குடி மேலக் கொன்னகுளம், செட்டிநாடு, கல்லல், ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியூர், 

விருதுநகர் மாவட்டத்தில் கள்ளிக்குடி, துலுக்கபட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான், தாழையூத்து ஆகிய ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

பயணச் சீட்டு முகவராக விரும்பும் இளைஞர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும் அந்த ரயில்நிலையம் அமைந்துள்ள மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். 

விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1,120 செலுத்த வேண்டும். மேலும், தொடர்புடைய ரயில் நிலையத்தின் பயணச் சீட்டு விற்பனைக்கேற்ப ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை காப்புத் தொகை செலுத்த வேண்டும்.

நியமிக்கப்படும் முகவர்கள் ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் ஆகியவற்றை விற்பனை செய்யலாம். 

மேலும், கட்டணச் சலுகை பயண சீட்டுக்களை அந்தந்த ரயில் நிலைய மேலாளர் அனுமதியுடன் விற்பனை செய்யலாம்.

ரூ.20 ஆயிரம் வரையிலான பயணச் சீட்டு விற்பனைக்கு 25 சதவீத கழிவும். ரூ. ஒரு லட்சம் வரையிலான பயணச் சீட்டு விற்பனைக்கு 15 சதவித கழிவும் 

ரூ. ஒரு லட்சத்துக்கும் மேலான பய ணச் சீட்டுகள் விற்பனைக்கு 4சதவீதம் கழிவு வழங்கப்படும். விண்ணப்பங்களை வருகிற 25-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குமுன்பாக ரயில்வே இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு https://sr.indi anrailways.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

The Madurai Railway Division is seeking applications from youth to act as railway ticket agents at 25 stations within its jurisdiction, including locations in Madurai, Dindigul, Trichy, Pudukottai, Sivaganga, Ramanathapuram, Virudhunagar, and Tirunelveli districts. 

Applicants must be at least 18 years old and residents of the district where the chosen railway station is located. A non-refundable application fee of ₹1,120 is required, along with a security deposit ranging from ₹2,000 to ₹5,000 depending on the ticket sales volume of the respective station. 

Appointed agents will be authorized to sell unreserved tickets and season tickets, and can also sell concession tickets with prior approval from the station manager. Commissions vary based on sales volume, ranging from 25% for sales up to ₹20,000 to 4% for sales exceeding ₹1 lakh. Applications must be submitted online via https://sr.indianrailways.gov.in/ by 3 PM on August 25th.

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback