பூங்காவில் ஜீப்பை துரத்தி 13 வயது சிறுவனைத் தாக்கிய சிறுத்தை அதிர்ச்சி வீடியோ
பெங்களூரு பன்னரகட்டா தேசியப் பூங்காவில் சபாரி வாகனத்தின் பின்னால் ஓடிவந்த சிறுத்தை, வாகனத்தில் இருந்த இடைவெளி வழியாக, 13 வயது சிறுவனைத் தனது நகங்களால் கீறிய அதிர்ச்சி வீடியோ
பூங்காவில் ஜீப்பை துரத்தி 13 வயது சிறுவனைத் தனது நகங்களால் கீறிய சிறுத்தை அதிர்ச்சி வீடியோ
பெங்களூரு பன்னரகட்டா தேசியப் பூங்கா, கர்நாடகாவில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இது பெங்களூரு நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது
இங்கு, நீங்கள் சிறுத்தை, புலி, யானை போன்ற விலங்குகளையும், பல்வேறு வகையான பறவைகளையும் காணலாம்.
பன்னரகட்டா பூங்காவில், நீங்கள் ஜீப் அல்லது பேருந்தில் சபாரி செய்யலாம். இதில், புலி, சிறுத்தை, யானை போன்ற விலங்குகளை அருகிலிருந்து பார்க்கலாம்.
இந்நிலையில் இன்று பெங்களூரு பன்னரகட்டா தேசியப் பூங்காவில் 13 வயது சிறுவனைச் சிறுத்தை தாக்கியது. சிறுவன் பயணித்துக் கொண்டிருந்த சபாரி வாகனத்தின் பின்னால் ஓடிவந்த சிறுத்தை, வாகனத்தில் இருந்த இடைவெளி வழியாக, சிறுவனைத் தனது நகங்களால் கீறியது. சபாரி வாகனங்களில் இது போன்ற இடைவெளிகளை அடைக்கப் பன்னரகட்டா பூங்கா இயக்குநர் சூர்ய சேன் உத்தரவிட்டுள்ளார்
Tags: வைரல் வீடியோ