தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு சுற்றறிக்கை 2025
கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு சுற்றறிக்கை 2025
30.04.2022 அன்றைய தேதியில் மாவட்ட வாரியாக மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களின் விபரம் குறித்த அறிக்கை கோரியதன் பேரில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிட விபரங்கள் அனுப்பப்பட்டதில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட பார்வை & ல் காணும் வருவாய் நிருவாக ஆணையரக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம உதவியாளா் பணிக்கு பத்தாம் வகுப்புத் தோ்வு மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும். தமிழை ஒரு பாடமாகக் கொண்டு தோ்வு எழுதியிருக்க வேண்டும். இந்த நடைமுறையுடன் புதிதாக விண்ணப்பதாரா் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதி தோ்ச்சி அடைந்திருந்தாலும் அல்லது தோ்ச்சி அடையவில்லை என்றாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரா் ஓட்டுநா் உரிமம் வைத்திருந்தாலும் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருந்தாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். கிராம உதவியாளா் பணிக்கென நடைபெறும் நோ்காணலின் போது, வாசித்தல் மற்றும் எழுதும் திறன் சோதிக்கப்படும். விண்ணப்பதாரரின் வாசிக்கும், படிக்கும் திறனுக்கேற்ப மட்டுமே மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.
ஈரோடு மாவட்ட கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு சுற்றறிக்கை 2025
கோயம்புத்தூர் மாவட்ட கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு சுற்றறிக்கை 2025
திருப்பூர் மாவட்ட கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு சுற்றறிக்கை 2025
Tags: வேலைவாய்ப்பு