உங்கள் ஸ்மார்ட் போன் கால் செட்டிங் திடீரென மாறிவிட்டதா - பழைய முறைக்கு மாற்றுவது எப்படி முழு விவரம் google dialer new
தற்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அழைப்புகளுக்காகத் தோன்றும் முகப்புப் பக்கம் மாறியிருக்கிறது. Caller Interface என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த முகப்பு மாறியிருப்பது ஆண்ட்ராய்டு பயனர்கள் பலரையும் குழப்பம் அடைய வைத்துள்ளது.
அழைப்புகள் வந்தால் ஏற்பதற்கு மேலே ஸ்வைப் செய்யும் முறை இருந்தது, தற்போது பக்கவாட்டில் ஸ்வைப் செய்வது போன்று மாறியிருக்கிறது.
காரணம் என்ன:-
ஆண்ட்ராய்டு போனிலிருந்து நீங்கள் ஒருவரை அழைக்கும்போதோ அல்லது அழைப்பைப் பெறும்போதோ, போனின் காட்சி மற்றும் வடிவமைப்பு மாறியதை நீங்கள் கவனித்திருக்கலாம்
இந்தப் புதிய வசதியால் அழைப்புகள் வரும்போது எப்படி அதை ஏற்பது எனத் தெரியாமல் குழம்பிப்போய் இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது எனப் பலரும் குழப்பமடைந்துள்ளனர். சிலர் தங்களது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.
மொபைல் போன் நிறுவனங்கள் அவ்வப்போது தொலைபேசிகளைப் புதுப்பிக்க அவ்வப்போது அப்டேட் கொடுக்கப்படுகின்றது.இதனால் செல்போன்கள் முன்பை விடச் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் மாறுகின்றன
கூகுள் நிறுவனம் தற்போது மெட்டீரியல் 3D எக்ஸ்பிரஸிவ்' என்ற அப்டேட்டின் கீழ், ஆண்ட்ராய்டு போனின் அழைப்பு செயலியுடைய வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளதாகக் கூகுள் தெரிவித்துள்ளது.
இந்த அப்டேட் முதலில் ஜூன் மாதத்தில் சிலருக்கு மட்டும் வெளியிடப்பட்டது. பின்னர் அது படிப்படியாகப் பரவலாக வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இப்போது நீங்கள் அழைப்பு செயலியைத் திறக்கும்போது, 'முகப்பு' மற்றும் 'கீபேட்' என்ற இரண்டு பகுதிகளை மட்டுமே இருக்கும் மேலும்
ஒரே எண்ணிலிருந்து வரும் அனைத்து அழைப்புகளும் இனி ஒன்றாகவோ அல்லது ஒரே இடத்திலோ காட்டப்படாது.யாரை எந்த நேரத்துக்கு அழைத்தீர்களோ அந்த வரிசைப்படி தனித்தனியாகக் காட்டப்படும். இதனால் நீங்கள் அந்தத் தொடர்பை மீண்டும் மீண்டும் தேட வேண்டிய அவசியம் இருக்காது.
மொபைல் போனில் கூகிள் பிளே ஸ்டோரில் ஆட்டோமேட்டிக் அப்டேட்கள் (தானியங்கி புதுப்பிப்புகளை) ஆன் செய்திருப்பதால், சில செயலிகள் தானாகவே அப்டேட் செய்து கொள்கின்றது.
பழைய முறைக்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்:-
மொபைல் போனில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று PHONE BY GOOGLE என்று சர்ச் செய்யுங்கள் அடுத்து அதில் உள்ள Uninstall என்பதை கிளிக் செய்து விடுங்கள் அவ்வளவுதான்
உங்கள் மொபைல் போனின் டயலர் பழைய முறைக்கு வந்து விடும்
Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்