2 மாத குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த உயிரை பணயம் வைத்து கடமையாற்றிய நர்ஸ் வைரல் வீடியோ
ஹிமாச்சல் மாநிலத்தில் 2 மாத குழந்தைக்குத் தடுப்பூசி செலுத்த, பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் சென்று கடமையாற்றிய நர்ஸ் கமலா.
இந்த வீடியோவைப் பகிர்ந்து, பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
இமாசலபிரதேசம் மண்டி அருகே உள்ள சவுகார்காட் பகுதியில் சுந்தர் என்ற மலைக்கிராமத்தில் மருத்துவம் பார்ப்பதற்காகப் பக்கத்து ஊரான டிகாரில் இருந்துதான் டாக்டர் அல்லது நர்சு வர வேண்டும்.
இந்நிலையில் அக்கிராமத்தில் வசித்துவரும் இளம்பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்து 2 மாதங்களாகின.பச்சிளம் குழந்தைக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்றநிலையில் மலைப்பகுதியில் அமைந்துள்ள அந்தக் கிராமத்தைக் கடந்த செல்லச் சிற்றாறு ஒன்றை கடக்க வேண்டும்.
தற்போது அங்குப் பெய்து வரும் கனமழை காரணமாகச் சிற்றாறில் வெள்ளம் பெருக்கெடுத்து காட்டாறாக ஓடியது.
டிகாரில் அரசு நர்சாகப் பணிபுரிந்து வரும் கமலாவோ, குழந்தைக்குத் தடுப்பூசி செலுத்த மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையுடன் முட்டுக்கட்டையாக இருந்த காட்டாற்றை, உயிரைத் துச்சமாக எண்ணி கடந்து கடமையை நிறைவேற்றிவிட்டு திரும்பினார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1959646033589444753
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ