Breaking News

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையத்தை சேர்ந்த சரத்குமார் என்பவர் புகார் அளித்துள்ளார்.விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது குன்னம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக 2-வது மாநில மாநாட்டில் தன்னை பவுன்சர்கள் தூக்கி வீசியதாகப் பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையத்தை சேர்ந்த சரத்குமார் என்பவர் புகார் அளித்துள்ளார்.மதுரை மாநாட்டில் 'ரேம்ப் வாக்' சென்ற விஜயை சந்திக்கும் ஆவலில் சரத்குமார் ரேம்ப் மீது ஏறி உள்ளார். 

அப்போது அவரைப் பவுன்சர்கள் தூக்கி வீசியதாகத் தெரிவித்துள்ளார்.பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் சரத்குமார் அளித்த புகாரின் பேரில் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது குன்னம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 189(2), 296(B), 115(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback