ரீல்ஸ் வீடியோ எடுக்கும்போது அருவியில் அடித்துச் செல்லப்பட்ட யூடியூபர் வைரலாகும் வீடியோ YouTuber Duduma Waterfall Odisha
ரீல்ஸ் வீடியோ எடுக்கும்போது அருவியில் அடித்துச் செல்லப்பட்ட யூடியூபர் வைரலாகும் வீடியோ
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் சாகர் துடு (22) என்பவர், அருவி ஒன்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்த 22 வயது யூடியூபர் சாகர் டுடு, தன் நண்பர் அபிஜித் பெஹெராவுடன் கோராபுட்டில் உள்ள துடுமா அருவிக்குச் சென்றிருந்தார்
அப்போது அங்குப் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் ஒரு பாறையின் மீது நின்று கொண்டு இருக்க ட்ரோன் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தபோது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாறையின் மீது சிக்கிக்கொண்ட சாகர் டுடுவை, அங்கிருந்த இருந்த அவரது நண்பர்கள் கயிறுமூலம் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால், வெள்ளப்பெருக்கு அதிகமானதால், சாகர் கண்ணிமைக்கும் நேரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
இந்த முயற்சி தோல்வியடைய, கண் இமைக்கும் நேரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அவர் காணாமல் போனது காண்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மச்சகுண்டா காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும், சாகர் டுடுவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதுவரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் முழுவதையும் அவரது நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.சுற்றுலா பயணிகள் காப்பாற்ற முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
வீடியோ பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1959790577253511350
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ