Breaking News

உ.பியில் கொடுரம்- திருமணம் ஆகி 9 ஆண்டுகள் கழித்து வரதட்தனை கேட்டு மனைவியை உயிருடன் எரித்து கொன்ற கணவர் மற்றும் மாமியார் Justice for Nikki

அட்மின் மீடியா
0

உ.பியில் கொடுரம்- திருமணம் ஆகி 9 ஆண்டுகள் கழித்து வரதட்தனை கேட்டு மனைவியை உயிருடன் எரித்துக் கொன்ற கணவர் மற்றும் மாமியார் 


உத்தரப் பிரதேசம் நொய்டாவில் உள்ள சர்சா மாவட்டத்தில் வசித்து வரும் விபின்- நிக்கி தம்பதியினருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டுத் திருமணம் நடந்து உள்ளது. இவர்களுக்கு 8 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

திருமணத்தின் பொழுது நிக்கிக்கு வரதட்சணையாக 40 லட்சம் ரூபாய் அளிப்பதாகப் பெண் வீட்டார் வாக்குறுதி அளித்திருந்தனர். அதில் 5 லட்சம் மட்டும் அப்போது கொடுத்துள்ளார்கள், 

இந்த நிலையில் வரதட்சணை பாக்கியாக இருக்கும் 35 லட்சத்தை விபின் குடும்பத்தினர் வாங்கி வருமாறு வற்புறுத்தியுள்ளனர்.இதனால் கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த வியாழன் நிக்கியை வரதட்தனை கேட்டுக் கணவரும் மாமியாரும் கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.  அவரது ஆறு வயது மகன் கண் முன்னாலேயே மாமியாரும் கணவரும் சேர்ந்து நிக்கி மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளனர். 

படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபின் குடும்பத்தினர் மீது கசாரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விபினை போலீசார் கைது செய்த நிலையில் இந்த விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது போலீஸ் காவலிலிருந்து விபின் தப்பியோட முயற்சித்தார். உடனே அவரைப் பிடிக்க முயன்ற போலீசார் அவரின் காலில் சுட்டனர். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. ஒரு வீடியோவில் நிக்கியை அவரது கணவரும், கணவரின் தாயாரும் சேர்ந்து முடியைப் பிடித்து இழுத்து அடித்து உதைக்கின்றனர். 

மற்றொரு வீடியோவில் நிக்கி உடல் முழுதும் எரிந்த நிலையில் வீட்டு படிக்கட்டில் அமர்ந்திருக்கிறார்கள்.நிக்கியின் கணவரும், மாமியாரும் சேர்ந்து நிக்கியின் உடம்பில் மண்ணெண்ணைய் ஊற்றி தீவைத்துள்ளனர். இதனால் நிக்கி அலறியடித்து வீட்டு படிக்கட்டுகளில் ஓடி இருக்கிறார். 

விபினும் அவரது தாயாரும் சேர்ந்து நிக்கியைத் தீவைத்து கொளுத்தியபோது அவர்களின் மைனர் மகன் மற்றும் நிக்கியின் மூத்த சகோதரி கஞ்சன் ஆகியோரும் அருகில் தான் இருந்தனர்.அவர்கள் கண்முன்பாகவே நிக்கியைத் தீவைத்து எரித்தனர். 

நிக்கியின் மகனிடம் அங்கு வந்த ஒருவர் அம்மாவை அப்பா கொலை செய்தாரா என்று கேட்டார். அதற்கு அச்சிறுவன் அம்மாவின் உடம்பில் எதையோ ஊற்றினார்கள். பின்னர் அம்மாவை அடித்தார்கள். அதனைத் தொடர்ந்து லைட்டரால் அம்மாவின் உடம்பில் தீயை பற்றவைத்தார்கள் என்று அச்சிறுவன் மழலைச் சத்தத்தில் தெரிவித்தான்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback