Breaking News

இந்திய செவிலியர் நிமிஷாவிற்க்கு ஏமன் நாட்டில் 16ம் தேதி மரண தண்டனை அறிவிப்பு நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

இந்திய செவிலியர் நிமிஷாவிற்க்கு ஏமன் நாட்டில் 16ம் தேதி மரண தண்டனை அறிவிப்பு நடந்தது என்ன முழு விவரம்



ஏமன் நாட்டவரை கொலை செய்த வழக்கில் சிக்கி உள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு 16 ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த 36 வயதானசெவிலியர் நிமிஷா பிரியா  ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு அந்நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. 

2023ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. இந்த நிலையில் வருகிற 16 ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏமன் நாட்டு சட்டப்படி ( இறந்தவரின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்கள் கேட்கும் நஷ்ட ஈடாக பணம் வழங்குவதுடன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னித்தால் குற்றவாளியின் தண்டனை தள்ளுபடி செய்யப்படும்) எனும் வழக்கம் உள்ளது. 

இதனை பயன்படுத்தி, நிமிஷா பிரியாவை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், வரும் 16 ம் தேதி நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback