தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளுக்கும் 24 மணி நேரமும் திறந்து இருக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அட்மின் மீடியா
0
அனைத்து கடைகளுக்கும் உத்தரவு.. இனி 24 மணி நேரமும்
தமிழகத்தில் 10-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று TN அரசு அறிவித்தது. ஆனாலும், இரவு 11 மணிக்கு மேல் கடைகளை மூட வேண்டும் என்று போலீசார் அழுத்தம் கொடுக்கின்றனர்.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம்; இதை போலீசார் தடுக்கக் கூடாது என்று அனைத்து காவல் நிலையங்களுக்கும், டிஜிபி தெரியப்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தேசிய ஓட்டல்கள் சங்கம் தொடர்ந்திருந்த வழக்கில் தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் வர்த்தக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி அளித்த அரசு உத்தரவை மீறி இரவு நேரங்களில் கடைகளை மூடும்படி காவல்துறை மிரட்டுவதாகக் குறிப்பிட்டிருந்தது.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், தமிழக டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் 24 மணி நேரம் கடைகளைத் திறந்துவைக்கலாம் என்ற அரசு உத்தரவுகுறித்து தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்