கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து, 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு, 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி நடந்தது என்ன
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து, 3 பேர் உயிரிழப்பு, 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
கடலூர் மாவட்டம் சிதம்பரம் - கடலூர் ரயில் வழித்தடத்தில் செம்மங்குப்பம் என்னும் பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இன்று காலை 7.45 மணியளவில் இவ்வழியே பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் பள்ளி வேன், திறந்திருந்த ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது அவ்வழியே சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் பள்ளி வேன் மீது அதிவேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டதோடு, வேனில் இருந்த பள்ளி குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் சிக்கிய பள்ளி வேன் முழுவதுமாக உருக்குலைந்து போயுள்ளது. இந்த விபத்தானது சிதம்பரம் - கடலூர் வழித்தடத்தில் வேப்பர்ஸ் குவாரி ரயில் நிலையத்திற்கும் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் இடையே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த கோர விபத்தில் நிவாஸ்(12) , சாருமதி (16) இரண்டு பள்ளி மாணவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். செழியன் என்ற மாணவர் மருத்துவ மனையில் உயிரிழந்தார்
வேன் விபத்துக்குள்ளானதை பார்த்து அவ்வழியே சென்ற அண்ணாதுரை என்பவர், விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்பதற்காக சென்போது மின்கம்பி அருந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளார்.
தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிமிலேஷ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும் - உறவினர்களுக்கும் - நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இ
வ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு பேருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிடவும் - பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரயில்வே கேட் கீப்பர் சஸ்பண்ட்
ரயில்வே கேட்டை மூடுவதற்காக பணியில் இருந்த ரயில்வே கேட் கீப்பர் வடமாநில இளைஞர் பங்கஜ் சர்மா, ரயில் வரும்போது கேட் மூடாமல் விடப்பட்டதே இந்த விபத்திற்கு காரணம் எனக் கூறப்பட்டது.
அவர் பணியின்போது தூங்கியதாகவும் குற்றம்சாட்டிய பொதுமக்கள் , ரயில்வே கேட் கீப்பர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் கேட் கீப்பர் கேட்டை மூட மூயற்சித்தபோது, தண்டவாளத்தைக் கடந்து சென்றுவிடுகிறேன் என ஓட்டுநர் வற்புறுத்தியதாகவும், அதோடு வேகமாக தண்டவாளத்தை கடக்க முயன்றதே விபத்துக்கு காணரம் என ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும் விபத்துக்குக் காரணமான கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1942477292531228889
Tags: தமிழக செய்திகள்