Breaking News

3 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராமல் குப்பைகளுடன் குப்பையாக தனியாக இருந்த நபர் வைரல் வீடியோ mumbai anupkumar

அட்மின் மீடியா
0

மும்பையில் அனுப் குமார் என்ற 55 வயதான நபர் தனது பெற்றோர் மற்றும் சகோதரரின் மரணத்தால் ஏற்பட்ட மன அதிர்ச்சி காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் அவர் தனிமை வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்


ஜுனாகர், செக்டார்-24 இல் உள்ள கார்கூல் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களும், 'சீல்' என்ற அரசு சாரா அமைப்பின் ஆர்வலர்களும் அவரை மீட்டனர். 

அவர் பன்வேலில் உள்ள சீல் ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டு, மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அவரது பிளாட் குப்பை மேடாக மாறிவிட்டதாகவும், அவர் மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகவும் சீல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். உணவு விநியோக செயலி மூலம் அவர் உணவைப் பெற்று வந்ததாக அந்த அரசு சாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அனுப் குமாரின் வீடு, வீடு போல இருந்திருக்கிறது. ஆனால் அவரது வீட்டிற்குள் மொத்தமாக குப்பை குளமாக இருந்திருக்கிறது. அவர் பல நாட்கள் குளிக்காமலும் இருந்திருக்கிறார். உணவு டெலிவரி வாங்குவதை தவிர வேறு எதற்கும் கதவை திறக்கவே இல்லையாம். 

தலையில் அழுக்கு பிடித்து, சொரி சிரங்கு போன்ற நோய் குறைபாடு வந்திருக்கிறது. அந்த அழுக்கு உடல் சருமத்திலும் நுழைந்து, கைகளும் கால்களும் கருப்பாக மாறி இருக்கிறது. 

அருகில் இருந்த மெத்தை உடைந்து, கிழிந்த நிலையில் இருந்திருக்கிறது. பல நாட்களாக அவர் அங்கிருந்த நாற்காலியில் மட்டும் படுத்து உறங்கி இருக்கிறார்.அவரை மீட்ட அதிகாரிகள், இப்போது அரசு மருத்துவமனையில் அவரை தங்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/NewsPlus_21/status/1939960497622716672

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback