தேனி தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார் – அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட நபர் காவலர்களால் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியான நிலையில், காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் என 5 பேர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்
ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ் என்பவர் ஜனவரி 14ம் தேதி மதுபோதையில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட புகாரில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்
தற்போது இவ்விவகாரம் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்க கூடுதல் எஸ்.பி.யை நியமித்து மாவட்ட எஸ்.பி. உத்தரவு
விசாரணை கைதி தாக்கியது சம்பந்தமாக பரப்பப்பட்டு வரும் வீடியோ குறித்து தேனி மாவட்ட போலீசார் விளக்க செய்தி
ரமேஷ் @ லெப்ட், த.பெ. சின்னச்சாமி, தெற்குத்தெரு, தேவதானப்பட்டி என்பவர் கடந்த 14.01.2025 ஆம் தேதி 12.30 மணியளவில் தேவதானப்பட்டி அரிசிக்கடை பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்கள் ஒன்று கூடி பொங்கல் விழா கொண்டாடி கொண்டிருந்தபோது மேற்படி நபர் குடிபோதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இடையுறு ஏற்படுத்திக்கொண்டும், அசிங்கமான செயல்களை செய்து கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.
தகவலின் அடிப்படையில் தேவதானப்பட்டி காவல் அலுவலர்கள் உடனடியாக சம்பவ இடம் விரைந்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்தவரை பிடிக்க முயன்றபோது காவலர்களுடன் பிரச்சினை செய்த நபரை நிலையம் கொண்டு வந்தபோது மேற்படி எதிரி நிலையத்திலும் தொடர்ந்து குடிபோதையில் தகராறு செய்தவரை ஆய்வாளர் மற்றும் உடன் பணிபுரிந்த காவலர்கள் அவரை கட்டுப்படுத்தியுள்ளனர்.
மேலும் எதிரி மீது தேவதானப்பட்டி காவல் நிலைய கு.எண் 13/2025 பிரிவு 296(b) பிரகாரம் வழக்கு பதிவு செய்து பின்பு முறையாக நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டார். மேற்படி எதிரியை நிலையத்தில் வைத்து கட்டுப்படுத்த முயற்சித்த போது அதிகப்படியான பலப்பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவருகிறது.
மேலும் இச்சம்பவம் குறித்து எந்தவொரு புகாரும் கொடுக்கப்படவில்லை. மேலும் இது சம்மந்தமாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் எதிரியை தாக்கியது சம்மந்தமாக பரப்பப்பட்டு வரும் வீடியோ குறித்து மேற்கூறிய விளக்கம் இப்பத்திரிக்கை செய்திமூலம் தெரியப்படுத்தப்படுகிறது. விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.
மேற்படி எதிரி மதுபோதையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்திய நாளிதழ் புகைப்படம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/FatimaADMKOffl/status/1940331288151650551
Tags: தமிழக செய்திகள்