தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி? how to apply rti online in tamilnadu
தகவல் அறியும் உரிமை சட்டம் RTI என்றால் என்ன?
இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டமானது 2005-ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே, மத்திய மற்றும் மாநில அரசாங்கத்திடம் இருக்கும் தகவல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுதான்.
அதாவது தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது எந்தவொரு மத்திய மற்றும் மாநில அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனத்தின் கையிலோ அல்லது கட்டுப்பாட்டிலோ உள்ள தகவலைத் தெரிந்து கொள்ளவும் தகவலைப் பெறும் உரிமையே ஆகும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதற்கு என தனியாக எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை.
நீங்கள் ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்தாலே போதுமானது ஆகும்
அந்த விண்னப்பத்தின் மேல் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் என்று எழுதி கொள்ளுங்கள்
அடுத்து உங்கள் விண்னப்பத்தை படித்து பார்த்து சரியாக இருப்பின் தபால் அலுவலகத்தில் பதிவு தபால் மூலம் ரிஜிஸ்டர் போஸ்ட்டில் அனுப்பவேண்டும் அதனுடன் பதில் அட்டை (AD) கார்டு இணைத்து அனுப்பவேண்டும்
மேல்முறையீடு
நாம் அனுப்பும் கேள்விக்குப் பொதுத் தகவல் அலுவலரிடம் இருந்து 30 நாட்களுக்குள் பதில் கிடைக்கப் பெறவில்லை என்றால் அல்லது அவரது பதில் திருப்தி அளிக்கவில்லை என்றாலோ, முடிவு பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அந்தத் துறையின், முதல் மேல் முறையீட்டு அலுவலரிடம் மேல்முறையீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாநில தலைமை தகவல் ஆணையர்,
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையம்,
2, தியாகராயர் சாலை,
ஆலையம்மன் கோயில் அருகில்,
தேனாம்பேட்டை,
சென்னை-600018
CENTRAL INFORMATION COMMISSION,
II floor,
August Kranti Bhavan,
Bhikaji Kama Place,
NEW DELHI – 110 066
Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி