Breaking News

பிங்க் ஆட்டோ வாங்க 1 லட்சம் மானியம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் Tamil Nadu Govt Pink Auto for women 1 lake subsidy

அட்மின் மீடியா
0

பிங்க் ஆட்டோ வாங்க 1 லட்சம் மானியம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் Tamil Nadu Govt Pink Auto for women 1 lake subsidy

சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் விதமாகவும் அரசு மானியமாக தலா 1 இலட்சம் விதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு, 'பிங்க் ஆட்டோ'ஸ் இயக்கம் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது

தகுதிகள் :-

•பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

• கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

• 20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

• ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

• சென்னையில் குடியிருக்க வேண்டும்.

• விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு (அ) தெற்கு), 8ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை 600001.

தமிழகத்தின் தலைநகர் சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 'பிங்க் ஆட்டோ' திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.

இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது

அதில் ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும், 

பெண்கள் மட்டும்தான் ஓட்டுநராக இருக்க வேண்டும், 

அவர்கள் பிங்க் நிற சீருடை அணிந்திருக்க வேண்டும், 

ஆட்டோவில் ஜிபிஎஸ், வாகன இருப்பிட கண்காணிப்பு கருவி இருக்க வேண்டும் என மோட்டர் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அரசானை வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஆட்டோ வாங்குவது எப்படி:-

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள். தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். சம்பந்தப்பட்ட வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கத்தின் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் / தொழிலாளர் உதவி ஆய்வாளர் / கிராம நிர்வாக அலுவலர் / வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடமிருந்து பணிச் சான்றிதழ் பெற்று (பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில்) பதிவேற்ற வேண்டும்.

சென்னை மாவட்டத்திற்கு வருவாய் ஆய்வாளர் கையொப்பமும் பிற மாவட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் கையொப்பமும் பெற்று பதிவேற்ற வேண்டும்.

அடையாளச் சான்றுகளாக ஓட்டுநர் உரிமம், பள்ளிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, பதிவுசெய்யப்பட்ட மருத்துவர் சான்றிதழ் அல்லது அரசு மருத்துவ மனையின் சிவில் சர்ஜன் பதவிக்குக் குறை வில்லாத மருத்துவ அலுவலரின் சான்றிதழ் ஆகியவற்றைப் பதிவேற்ற வேண்டும்.

நீண்ட காலமாக ஓட்டுநராக இல்லாத பெண்களும், நலவாரியத்தில் பதிவு செய்யலாம். வேறு வாரியங்களில் பதிவு செய்துள்ள பெண்களும், ஆட்டோ ஓட்டுநராக விருப்பம் இருந்தால், வாரியத்தினை மாற்றிக்கொண்டு புதிய ஆட்டோ வாங்க மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம். 

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback