Breaking News

கொடைக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

 ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி: ஐகோர்ட்


ஊட்டி, கொடைக்கானலுக்கு இ பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் வருகை குறித்த புள்ளி விவரங்களை சேகரிப்பதற்காக ஊட்டி மற்றும் கொடைக்கானல் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ_பாசை கட்டாயமாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொளி காட்சி மூலம் ஆஜராகி இருந்தனர். 

நீதிபதிகள், இ பாஸ் இல்லாமல் எந்த வாகனமும் ஊட்டி கொடைக்கானலுக்கு செல்ல வில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இபாஸ் பெற்ற பிறகு வாகனங்களை அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும் இபாஸுக்கு விண்ணப்பிக்கும் போது அந்த விண்ணப்பத்தில் உரிமம் பெற்ற ரிசார்ட்கள் ஹோட்டல்கள் குறித்த விபரங்களை சேர்க்க முடியுமா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இ பாஸ் நடைமுறை சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்துவதற்கு அல்ல என தெளிவுபடுத்திய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback