தமிழ்நாட்டில் இன்று முதல் உயர்ந்தது தனியார் பால், தயிர் விலை முழு விவரம்
தமிழ்நாட்டில் இன்று முதல் உயர்ந்தது தனியார் பால், தயிர் விலை முழு விவரம்
இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி,
முன்னணி தனியார் பால் நிறுவனத்தின் பால் மற்றும் தயிர் விற்பனை விலை உயர்வு இன்று (08.11.2024) முதல் அமுலுக்கு வந்தது. பால் கொள்முதல் விலை, மூலப்பொருட்கள் விலை பால் முகவர்களுக்கான பால் தயிர் விற்பனைக்கான கமிஷன் தொகை, வாகன எரிபொருள் விலை உள்ளிட்டவற்றின் உயர்வு இருக்குமாயின் ஆரோக்யா பால், தயிர் விற்பனை விலை உயர்வு என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கும்.
ஆனால் தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை படு வீழ்ச்சியில் உள்ள நிலையில், ஆவினை விட லிட்டருக்கு 5.00ரூபாய் முதல் 10.00ரூபாய் வரை குறைந்த விலை கொடுத்தே தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்து வரும் நிலையில் ஆரோக்யா நிறுவனத்தின் தற்போதைய இந்த விற்பனை விலை உயர்வு என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். (ஆவின் கொள்முதல் விலை 35.00+3.00=38.00ரூபாய், தனியார் கொள்முதல் 28.00ரூபாய் முதல் அதிகபட்சம் 33.00ரூபாய் வரை மட்டுமே)
அத்தியாவசியப் உணவுப் பொருளாக விளங்கும் பால்வளத்துறையில் தனியார் கொள்முதல் மற்றும் விற்பனை செய்யும் பாலுக்கான விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லாததும், அந்த அதிகாரம் உள்ள மத்திய அரசோ பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் நலன் குறித்து சிந்திக்க தவறியதுமே இது போன்று தனியார் பால் நிறுவனங்கள் தன்னிச்சையாக செயல்படும் நிலை உருவாக காரணமாக இருக்கிறது.
குதிரையின் கடிவாளம் பாகனிடம் இல்லாது போனால் எவ்வாறு அக்குதிரை தறிகெட்டு ஓடுமோ அது போல தனியார் பால் நிறுவனங்களை கட்டுக்குள் வைக்க ஆட்சியாளர்கள் தவறி வருவதால் தனியாருக்கு பால் வழங்கும் பால் உற்பத்தி செய்யும் விவசாய பெருமக்களுக்கு உரிய விலை கிடைக்காமலும், நுகர்வோராகிய பொதுமக்கள் அதிக விலை கொடுத்து பாலினை வாங்க வேண்டிய சூழலும் தொடர்கதையாகவே நீடித்து வருகிறது.
இதனால் பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்கள் வேறு தொழிலையோ அல்லது வேறு வேலைகளையோ நோக்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ள காரணத்தால் தமிழ்நாட்டில் பால் உற்பத்தி படிப்படியாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் இனியாவது விழித்துக் கொண்டு கூட்டுறவு பால் நிறுவனங்களைப் போல தனியார் பால் நிறுவனங்களையும் அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட அல்லது அவற்றின் குறைந்தபட்ச பால் கொள்முதல் விலை, அதிகபட்ச பால் விற்பனை விலையை நிர்ணயம் செய்ய தகுந்த சட்டமியற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது என் அவர் தெரிவித்துள்ளார்
விலை உயர்வு
நிறை கொழுப்பு பால் அரை லிட்டர் பாக்கெட் ரூ.36இல் இருந்து 37 ரூபாயாகவும்,
ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.65இல் இருந்து 67 ரூபாயாகவும்,
நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் ரூ.31இல் இருந்து 32 ரூபாயாகவும்,
ஒரு லிட்டர் ரூ.58இல் இருந்து 60 ரூபாயாகவும்,
400 கிராம் தயிர் பாக்கெட் ரூ.30இல் இருந்து 32 ரூபாயாகவும்,
500 கிராம் தயிர் ரூ.37இல் இருந்து 38 ரூபாயாகவும்,
1 கிலோ தயிர் ரூ.66இல் இருந்து 68 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
Tags: கொரானா செய்திகள்
