Breaking News

திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது

இந்த நிலையில், கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.

அதேபோல் சிவகங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. ஆனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விடுமுறை அளிப்பது தொடர்பாக அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback