நடிகர் டெல்லி கணேஷ் திடீர் மரணம் திரையுலகினர் சோகம்
நடிகர் டெல்லி கணேஷ் (வயது 80) உடல்நலக்குறைவால் காலமானார்.. உடல்நிலை சரியில்லாத நிலையில் இரவு 1 மணி அளவில் உயிர் பிரிந்தது
சென்னை ராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக பல்வேறு படிங்களில் நடித்த டெல்லி கணேஷ் நெல்லையில் பிறந்தார்.
1976ல் இயக்குநர் கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்' படத்தில் அறிமுகமானார். டெல்லியில் உள்ள ஏர்போர்ஸில் பணிபுரிந்தவர். இவர் முதல் முறையாக டெல்லி தட்சிண பாரத நாடக சபாவில் நடித்ததால் இயக்குனர் கே. பாலச்சந்தர் டெல்லி கணேஷ் என்ற பெயர் சூட்டினார். இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு கலைமாமணி விருதும் வென்றுள்ளார். 500க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், குறும்படங்கள், டிவி நெடுந்தொடர்கள், வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார்
நடிகர் டெல்லி கணேஷ் காலமானது திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Tags: தமிழக செய்திகள்
