Breaking News

கன்னியாகுமரியில் வழக்கறிஞரை கொடூரமாக வெட்டி கொலை செய்து எரித்த கொடூர சம்பவம் முழு விபரம்

அட்மின் மீடியா
0
கன்னியாகுமரியில் வழக்கறிஞர் வெட்டி கொலை செய்து எரித்த கொடூர சம்பவம் முழு விபரம்

கன்னியா குமரியை சேர்ந்த வழக்கறிஞர் கிறிஸ்டோபர், என்பவர் திருப்பதி சரத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரின் சொத்து தொடர்பான வழக்கை நடத்தி வந்தார், இதில் வழக்கறிஞர் எதிர் வழக்கறிஞருடன் ஆதரவாக செயல்பட்டதாக கூறி, கிறிஸ்டோபரை இசக்கிமுத்து வெட்டிக் கொன்று எரித்துள்ளார். பின்னர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் கொலை செய்த இசக்கி முத்து சரணடைந்துள்ளார்

இசக்கிமுத்து தனது வழக்கறிஞரான கிறிஸ்ஓபரிடம்  தனது வழக்கு குறித்து கேட்டுள்ளார்.ஆனால் வழக்கறிஞர் கிறிஸ்டோஃபர் சரிவர பதில் அளிக்காமல் இருந்துள்ளார். மேலும் வழக்கறிஞர் கிறிஸ்டோஃபர், தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு, எதிர் தரப்புக்கு சாதகமாக செயல்படுவது தெரியவந்து

இதையடுத்து, வழக்கு தொடர்பான ஆவணங்களை தருமாறு கிறிஸ்டோபரிடம் கேட்டுள்ளார் இசக்கிமுத்து. 

இந்நிலையில் இன்று மாலை இசக்கிமுத்து, வழக்கறிஞர் கிறிஸ்டோஃபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர், உடலை பீமநேரி அருகே உள்ள குளத்தின் கரையோரம் பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு இசக்கிமுத்துவை அழைத்துச் சென்ற போலீசார் வழக்கறிஞரின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளி இசக்கிமுத்துவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback