நவம்பர் 7 ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
நவம்பர் 7 ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நவம்பர் 7ம் தேதி திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ளது. அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனினும் முக்கிய அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
