Breaking News

உத்திரகாண்டில் பள்ளதாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து 22 பேர் பலி மீட்பு பணி வீடியோ uttarakhand bus accident

அட்மின் மீடியா
0

உத்திரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் நைனிடாவில் இருந்து ராம் நகருக்கு சென்ற பேருந்து #மார்ச்சுலா அருகே பள்ளத்தில் விழுந்து விபத்து 22 பேர் உயிரிழப்பு SDRF, NDRF, போலீஸ் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் மீட்புபணியில் ஈடுபட்டுள்ளனர்


உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தில் மலைச்சரிவிலிருந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 22 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த பேருந்தில் மொத்தம் 40 பேர் சென்ற நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்று காலை நைனி டண்டாவில் இருந்து ராம் நகருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மலை சரிவில் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. 

மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றார்கள் மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1853328609525788921

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback