தமிழகத்தில் 20 வகையான முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு முழு விவரம்
பத்திரப்பதிவு துறையில் 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது
தமிழகத்தில் வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மெண்ட் என 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறை பல மடங்குகள் உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
தமிழகத்தில் வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் என பல்வேறு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பவர் பத்திரம் உள்ளிட்ட சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் ஆவணங்களுக்கும், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இனி, 20 ரூபாய்க்கு பத்திரம் வாங்க முடியாது. அந்த பத்திரம் இனி 200 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.
சாதாரண செட்டில்மென்ட், வாடகை ஒப்பந்தம் போன்றவற்றுகளுக்காக வாங்கப்பட்டு வந்த ரூ.20 மூத்திரைத்தாள் கட்டணம், இனி செல்லாது. குறைந்த பட்சம் ரூ.200 கொண்ட முத்திரைத்தாள் மட்டுமே செல்லுபடியாகும்.
ஒப்பந்தம் புதிய கட்டணம் ரூ.200 பழைய கட்டணம் ரூபாய் (20)
தத்தெடுப்பு ஆவணம் புதிய கட்டணம் ரூ 1,000 பழைய கட்டணம் ரூபாய் (100),
ரத்து ஆவணம் புதிய கட்டணம் ரூ 1,000 பழைய கட்டணம் ரூபாய்(50),
நகல் கட்டணம் புதிய கட்டணம் ரூ 100 பழைய கட்டணம் ரூபாய்(20).
அசல் நகல் புதிய கட்டணம் ரூ 500 பழைய கட்டணம் ரூபாய் (20).
கூட்டு ஒப்பந்தம் புதிய கட்டணம் ரூ 1,000 பழைய கட்டணம் ரூபாய் (300),
அடமான மறுபரிமாற்றம் புதிய கட்டணம் ரூ 1,000 பழைய கட்டணம் ரூபாய் (80).
பாதுகாப்பு பத்திரங்கள் புதிய கட்டணம் ரூ 1,000 பழைய கட்டணம் ரூபாய் (80),
ஒப்பந்ததை ரத்து செய்தல் புதிய கட்டணம் ரூ 1,000 பழைய கட்டணம் ரூபாய் (80),
குத்தகையை விடுவித்தல் புதிய கட்டணம் ரூ 1,000 பழைய கட்டணம் ரூபாய் (40)
டிரஸ்டிற்குள் பரிமாற்றம் புதிய கட்டணம் ரூ 1,000 பழைய கட்டணம் ரூபாய் (30),
டிரஸ்ட் அறிவித்தல் புதிய கட்டணம் ரூ 1,000 பழைய கட்டணம் ரூபாய் (180),
டிரஸ்ட் உரிமையை மீட்டெடுத்தல் புதிய கட்டணம் ரூ 1,000 பழைய கட்டணம் ரூபாய் (120).
மேற்கண்ட கட்டண உயர்வு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
