மரணம் இப்படி கூட வருமா:- தாயுடன் நடந்து சென்ற சிறுமி மீது 5-வது மாடியில் இருந்து கீழே விழுந்த நாய் - சிறுமி உயிரிழப்பு நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வீடியோ
மரணம் இப்படி கூட வருமா:- தாயுடன் நடந்து சென்ற சிறுமி மீது 5-வது மாடியில் இருந்து கீழே விழுந்த நாய் - சிறுமி உயிரிழப்பு நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வீடியோ
மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள மும்ப்ரா பகுதியில் சாலையில் 4 வயது சிறுமி ஒருவர் தனது தாயுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் 5-வது மாடியில் இருந்து திடீரென நாய் ஒன்று கீழே சென்று கொண்டிருந்த சிறுமி மீது விழுந்தது. இதில் சிறுமி பலத்த காயமடைந்தார்.
உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் . அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிறுமி மீது நாய் விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும், நாய் எப்படி கீழே விழுந்தது. தானாக குதித்ததா? அல்லது தூக்கி எறியப்பட்டதா? என்பது தெளிவாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1821255314441957801
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ