தனியார் பள்ளியில் ஆசிரியராக ஏஐ ரோபோ அறிமுகம் முழு விவரம் robot introduced at National Vidyalaya Senior Secondary School
தனியார் பள்ளியில் ஆசிரியராக ஏஐ ரோபோ அறிமுகம் முழு விவரம் robot introduced at National Vidyalaya Senior Secondary School
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள நேஷனல் வித்யாலயா சீனியர் செகண்டரி தனியார் பள்ளியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான ரோபோ ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளது
சுமார் 6 லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த ஏஐ ரோபோ 1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்கள் பற்றிய சந்தேகங்ளுக்கு விடை அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
மேலும் இந்த ஏஐ ரோபோவிற்க்கு ஆசிரியர் வித்யா சரஸ்வதி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது .தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஏஐ ரோபோ ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் ஆங்கிலத்தில் பதில் அளிக்கும் வகையில் உருவாக்க்கப்பட்டுள்ளது விரைவில் தமிழில் பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த ஏஐ ரோபோவை இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற கணினி அறிவியல் ஆசிரியை ஈஸ்வரி ஜெயராமன் என்பவர் AI மூலம் செயல்படும் வித்யா சரஸ்வதி என்ற ஆசிரியர் ரோபோவை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்