Breaking News

12 ம் வகுப்பு படித்தவர்கள் இந்திய விமானப்படை அக்னிவீர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் agneepath recruitment 2024

அட்மின் மீடியா
0

சென்னை மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வு இணையதளம் வாயிலாக 08.07.2024 முதல் 28.07.2024 வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

அக்னிவீர் வாயு இந்திய விமானப் படை தேர்வு இணையதளம் வாயிலாக 18.10.2024 முதல் நடைபெறவுள்ளதாகவும், இத்தேர்விற்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் 08.07.2024 முதல் 28.07.2024 வரை விண்ணப்பிக்குமாறும் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அக்னிவீர்வாயு இந்திய விமானப் படை தேர்வுக்கு தகுதியான கல்வித் தகுதி12-ம் வகுப்பு அல்லது மூன்று வருட பட்டய படிப்பு அல்லது தொழில் படிப்புகள் படித்தவர்களும் மற்றும் வயது வரம்பு 03.07.2004 முதல் 03.01.2008 வரை பிறந்துள்ள 20 வயதுக்குட்பட்ட மாணவ/மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விருப்பமுள்ள, ஆர்வமுள்ளவர்கள் இது தொடர்பான விவரங்களை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

சென்னை மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வில் பங்கு பெற்று பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/06/2024062014.pdf

அக்னிபத் திட்டம் என்றால் என்ன?

இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் 4 ஆண்டுகள் ராணுவத்தில் குறுகிய கால வீரராக (முப்படையில் ஏதாவது ஒன்றில்) சேர முடியும்.

அக்னிபாத் திட்டத்தில் இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். 

4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.

விருப்பம் இல்லை என்றால் 4 வருடத்திற்கு பின் வெளியேறலாம் விருப்பம் உள்ளவர்கள் நிரந்தரமாக சேர விண்ணப்பிக்கலாம்

இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

பெண்கள், ஆண்கள் இரு பாலினரும் சேர முடியும் 17.5 - 21 வயது கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி.

இந்த திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

வருடம் செல்ல செல்ல சம்பளம் உயர்த்தப்படும்.

அதாவது 4வது வருடம் 40 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பளம் தரப்படும்.

வருமான வரி கிடையாது.

அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது. 

தனிப்பட்ட இன்சூரன்ஸ், 

மெடிக்கல் இன்சூரன்ஸ் வழங்கப்படும்.

இந்த 4 வருட ராணுவ பணி காலத்தில், ஏதாவது ராணுவ சண்டையில் காயங்கள் ஏற்பட்டால் அதற்கு 44 லட்சம் ரூபாய் வரை, காயத்தை பொறுத்து நிவாரணமாக வழங்கப்படும்.

அக்னிபாத் திட்டத்தின் கீழ்,இந்திய ராணுவத்தில் சேர  நேற்று முதல் அடுத்த மாதம் (மார்ச்) 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அக்னிவீரர் தேர்வின் முதல் படியான பொதுத்தேர்வு ஏப்ரல் 17 முதல் 30-ந்தேதிக்குள் நாடு முழுவதும் சுமார் 180 மையங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேவையான ஆவணங்கள்:-

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், 

பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது 3 ஆண்டுகள் பொறியியல் டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ் அல்லது 2 ஆண்டுகள் தொழில்சார்ந்த படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ் அல்லது தொழில்சார்ந்த படிப்பல்லாத இரண்டு ஆண்டு ஆங்கிலம், இயற்பியல், கணிதம் படித்தவர்கள் மதிப்பெண் சான்றிதழ்

தேர்வுக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். 

agneepath army apply date

agneepath scheme eligibility

agneepath scheme

agneepath scheme details

agneepath scheme apply online

agneepath scheme details qualification

agneepath scheme qualifications

Agneepath Scheme 2023 Details Pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback