Breaking News

மும்பை புழுதி புயலில் பிரம்மாண்ட விளம்பரப் பலகை சாய்ந்து 14 பேர் பலி 70 பேர் படுகாயம் விபத்து சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

மும்பை புழுதி புயலில் பிரம்மாண்ட விளம்பரப் பலகை சாய்ந்து பேர் பலி 70 பேர் படுகாயம் விபத்து சிசிடிவி வீடியோ 

மும்பை-கர்கோபார் பகுதியில் புழுதி புயலின்போது பிரம்மாண்ட விளம்பரப் பலகை சாய்ந்து பெட்ரோல் பங்க் மீது விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழப்பு, 74 பேர் படுகாயம்

மும்பை நகரில் திங்கள்கிழமை 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியதுடன் மழைப்பொழிவும் இருந்தது. இதில் ராட்சத விளம்பர பேனர் விழுந்ததில்  14 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 70 க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மும்பை மாநகரில் திங்கட்கிழமை மாலை 3 மணி அளவில் 40 - 50 கி.மீ வேகத்தில் கடுமையான புழுதிப் புயல் வீசியது. மும்பையின் காட்கோபர் பகுதியில் புழுதிப் புயல் வீசியதில் ராட்சத இரும்பு பேனர் ஒன்று அங்கிருந்த பெட்ரோல் பங்க் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்

மீட்புப் பணிகளில் இதுவரை 74 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது. 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/Milan_reports/status/1790015223669113021

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback