Breaking News

விரைவு ரயில் டிக்கெட் இருந்தால் மின்சார ரயிலில் தனியாக டிக்கெட் எடுக்கத் தேவையில்லை தெற்கு ரயில்வே அறிவிப்பு முழு விவரம் southern railway suburban train ticket

அட்மின் மீடியா
0

விரைவு ரயில் டிக்கெட் இருந்தால் புறநகர் ரயிலுக்கு தனியாக டிக்கெட் எடுக்கத் தேவையில்லை தெற்கு ரயில்வே அறிவிப்பு முழு விவரம்

பல்வேறு இடங்களில் இருந்தும் சென்னைக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களில் பயணிப்போர், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு அதற்கு முந்தைய நிலையங்களில் இறங்கி மின்சார ரயில்களில் ஏறி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்கின்றனர்.

இது குறித்து தெற்கு ரயில்வே துணை தலைமை வணிக மேலாளர் வெங்கட சுப்பிரமணியன் சுற்றறிக்கை 

ரயில்வேயின், 2015ம் ஆண்டு உத்தரவுப்படி, விரைவு ரயில் முன்பதிவு அல்லது 'ஏசி' வகுப்பு டிக்கெட் வைத்திருக்கும் பயணி, அந்த ரயில் சென்றடையும் நிலையம் வரை, மின்சார ரயிலில் பயணிக்கலாம். 

ஆனால், டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள அதே தடத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும். ரயில்வே விதிகள்படி, அந்த டிக்கெட் பரிசோதகர்கள் இதற்கு அபராதம் விதிப்பது சரியானது அல்ல. எனவே ரயில்வே அலுவலர்கள், டிக்கெட் பரிசோதகர்களுக்கும், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கும் இதுபற்றி அறிவுறுத்த வேண்டும்' என்று அவரது சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

உதாரணமாகத் நெல்லையில் இருந்து வரும் பயணி ஒருவர் கிண்டிக்குச் செல்ல வேண்டுமெனில், தாம்பரத்தில் இறங்கி எழும்பூர் செல்லக்கூடிய புறநகர் இரயிலுக்கு மாற வேண்டும். 

அல்லது செண்ட்ரல் நிலையம் இறங்கி கிண்டிக்கு செல்ல புறநகர் ரயிலுக்கு மாற வேண்டும்அப்படி மாறுபவர்கள் புறநகர் இரயிலில் பயணிக்கத் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டாம் உங்கள் விரைவு ரயில் டிக்கெட் வைத்தே மின்சார ரயிலில் பயணம் செய்யலாம் அதற்குத் தனியாக எந்த டிக்கெட்டும் எடுக்க வேண்டியது இல்லை. 

நெல்லையில் இருந்து ஒருவர் கிண்டிக்குச் செல்கிறார் என்றால் அவரிடம் கிண்டி வரைக்குமான டிக்கெட் கட்டணம் வசூலிப்பது இல்லை. ஏனென்றால் கிண்டியில் விரைவு ரயில் நிற்காது. எனவே அவர் எழும்பூர் வரை டிக்கெட் எடுக்கிறார். இதனால் அந்த முன்பதிவு டிக்கெட்டை கொண்டு அவர் புறநகர் இரயிலில் பயணிக்கலாம். ஆனால், தாம்பரம் வரை டிக்கெட் எடுத்து விட்டு அதற்கு அடுத்த இரயில் நிலையத்திற்கு செல்ல இயலாது.

ரயில்வே துணை தலைமை வணிக மேலாளர் வெங்கட சுப்பிரமணியன் சுற்றறிக்கை 



https://twitter.com/GMSRailway/status/834404006030045185/photo/1

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி

Give Us Your Feedback