தமிழகம் முழுவதும் முதல்வர் காப்பீட்டுத் திட்ட முகாம் டிசம்பர் 2 ம் தேதி நடைபெறும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் புதிய குடும்பங்களை சேர்க்க, தமிழகம் முழுவதும் டிசம்பர் 2-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது
தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் 1.44 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன.இந்நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்கள் டிசம்பர் 2ம் தேதி நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
இந்த முகாம்களில் காப்பீட்டு திட்டத்தில் அட்டைகள் பெறாதவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். பலர் கடந்த 2006-ம் ஆண்டு வழங்கப்பட்ட காப்பீட்டு திட்ட அட்டையை வைத்துள்ளனர். அந்த அட்டை தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்று ஆராய்ந்து புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள்