Breaking News

ஒரே வாட்ஸ் அப்பில் இரண்டு அக்கவுண்ட் பயன்படுத்தலாம் எப்படி தெரியுமா

அட்மின் மீடியா
0

ஒரே வாட்ஸ் அப் மூலம் இரண்டு கணக்குகளை பயன்படுத்தலாம்!வாட்ஸ்ஆப்பில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை கொண்டு வர முடியும். ஒரே செயலியில், இனி இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளை ஒருவரால் பயன்படுத்த முடியும் 



2 வாட்ஸ்அப் கணக்குகள் இப்போது ஒரே போனில் பயன்படுத்தலாம் எப்படிஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை இப்போது ஒரே போனில் பயன்படுத்தலாம். அலுவலக பயன்பாடு மற்றும் பர்ஸ்னல் வாட்ஸ்அப் கணக்களை ஒரே போனில் இணைத்து பயன்படுத்தலாம்.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தன் பயனாளர்களுக்கு புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அண்மையில் வாட்ஸ்அப்பில் சேனல்களை அறிமுகப்படுத்திய நிலையில், மற்றொரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது

அந்த வகையில் வேறு வேறு வாட்ஸ்அப் கணக்குகளை ஒரே போனில் இணைத்து பயன்படுத்தும் படி புதிய அம்சம் கொண்டு வரப்படும் என மெட்டா முன்னதாக கூறியிருந்தது. 

தற்போது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை ஒரே போனில் பயன்படுத்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது

இந்த புதிய அம்சம், பல WhatsApp கணக்குகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். முன்னதாக, வாட்ஸ்அப்பில் பல கணக்குகளைப் பயன்படுத்த, பயனர்கள் ஒரு வாட்ஸ்அப்பில் இருந்து வெளியேறி, மற்றொரு கணக்குடன் உள்நுழைய வேண்டும். அது பயனாளர்களுக்கு பெரும் சிக்கலாக இருந்தது

ஆனால் தற்போது ஒருவர் தான் வைத்திருக்கும் இரண்டு மொபைல் எண்களிலும், வாட்ஸ்ஆப்பில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை கொண்டு வர முடியும். ஒரே செயலியில், இனி இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளை ஒருவரால் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எப்படி பயன்படுத்துவது?

இந்த அம்சம் பயன்படுத்த 2 போன் நம்பர் அல்லது சிம் கார்டு வைத்திருக்க வேண்டும். அதோடு டூயல் சிம் சப்போர்ட் போன் வைத்திருக்க வேண்டும். இதை செய்வது மிகவும் ஈஸி.

முதலில் உங்கள் போனில் வாட்ஸ்அப் சென்று செட்டிங்ஸ் ஓபன் செய்யவும்.

இப்போது உங்கள் பெயரின் பக்கத்தில் இருக்கும் ஏரோமார்க்கை கிளிக் செய்யவும்.

அடுத்து அதில் இருக்கும் Add account என்பதை கிளிக் செய்யவும்

அடுத்து அதில் நீங்கள் இணைக்க இருக்கும் வாட்ஸ்அப் கணக்கின் மற்றும் ஒரு மொபைல் எண்ணை டைப் செய்யவும். 

இப்போது அந்த எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்படும் ஒடிபியை பதிவிட்டு வெரிபை செய்யவும் அவ்வளவு தான் 

இப்போது உங்கள் 2-வது வாட்ஸ்அப் கணக்கு Add ஆகிவிடும். 

தேவையின்போது செட்டிங்ஸ் பக்கம் சென்று பெயருக்கு அருகில் உள்ள arrow-வை கிளிக் செய்து கணக்கை மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் இரண்டு வாட்ஸப்பிற்க்கும் நோடிபிகேஷன் மற்றும் செட்டிங்ஸ் உட்பட ஒவ்வொரு கணக்கிற்கும் அதன் சொந்த அமைப்புகள் தனித்தனியாகவே இருக்கும். 

ஒவ்வொரு கணக்கிற்கும் தனித்தனியாக சாட்களை பிளாக்செய்ய அல்லது பேக்கப் எடுக்க, செய்திகளை நீக்கவும் செட்டிங்ஸ்களை அமைத்துக் கொள்ளலாம்.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback