Breaking News

திருவள்ளூரில் 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

அட்மின் மீடியா
0

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் முத்து சரவணன் மற்றும் சதீஷ் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் டெல்லியில் கைதானவர்கள் சென்னை அழைத்து வந்த நிலையில் போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்ற போது என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கொலை வழக்கு உட்பட பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த ரவுடி முத்து சரவணன் என்பவர் இன்று காலை தமிழக காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார்.

செங்குன்றம் அருகே பாடியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கொலை வழக்கிலும், வேறொரு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு உட்பட 7 கொலை வழக்குகளில் காவல்துறையினாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறியப்பட்டவர் ரவுடி முத்து சரவணன் தலைமறைவாக இருந்தநிலையில் அவர் இருக்கும் இடம் அறிந்து இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சோழவரம் வண்டலூர் பூங்கா அருகே புதூர், மாரம்பேடு எனும் இடத்தில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.

இதில் போலீசார் சுற்றி வளைத்த உடன் அங்கிருந்து தப்பிக்க காவல்துறையினரை நோக்கி முத்து சரவணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தற்காப்புக்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முத்து சரவணன் உயிரிழந்தார். 

மேலும், அவரது கூட்டாளியான சதீஷ் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.இதில் துப்பாக்கி குண்டு காயத்துடன் ரவுடி சதீஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சதீஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்

.ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த போலீசார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த முத்து சரவணன், சதீஷின் உடல்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback