இந்திய நாட்டின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய திட்டமா? President of Bharat
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது
ஜி-20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 'பாரத் மண்டபம்' என்ற சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் இந்த மாநாடு வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் ஜி20 உச்சி மாநாட்டிற்கு வரும் தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்தளிக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழில் அவரை குறிப்பிடும் இடத்தில், "இந்தியாவின் ஜனாதிபதி" என்பதற்கு பதிலாக "பாரத்தின் ஜனாதிபதி" என அச்சிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதில் 'பாரத்' என மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மற்றும் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய உள்ள மசோதா ஆகியன தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
ஜனாதிபதி மாளிகை சார்பில், செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் ஜி20 மாநாட்டின் இரவு விருந்துக்கு வழக்கமான 'இந்திய ஜனாதிபதி' என்பதற்கு பதிலாக 'பாரதத்தின் ஜனாதிபதி' ('President of Bharat') என்ற பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்